உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வைட்டமின் ப கவனிப்பு தி.மு.க., வினர் ஜாலி

வைட்டமின் ப கவனிப்பு தி.மு.க., வினர் ஜாலி

தமிழகத்தில் வரும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, மீண்டும் ஆட்சியை கைப்பற்றதி.மு.க., தலைமை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு கடந்த, 6 மாதங்களாக கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளை உற்சாகமடைய, பண்டிகை காலங்களில் 'வைட்டமின் ப' கவனிக்கப்பட்டது. தற்போது, தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடந்து வருகிறது. இப்பணியில், தி.மு.க., நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகிறனர். சிதம்பரம் சட்டசபை தொகுதியில் மொத்தம் 260 பூத்துகள் உள்ளன. இதில், 10 பூத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர், பூத் நிலை ஏஜன்ட், பூத் டிஜிட்டல் ஏஜன்ட், 100 ஓட்டுக்கு ஒரு ஏஜன்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை கவனிக்க, பூத் ஏஜன்ட் மற்றும் பூத் டிஜிட்டல் ஏஜன்ட் என 2 பேருக்கும், ஒவ்வொரு பூத்திற்கும் 5 ஆயிரம் ரூபாய், வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சிதம்பரம் சட்டசபை தொகுதியில் பூத் ஏஜன்ட், பூத் டிஜிட்டல் ஏஜன்ட் 'குஷி' யாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ