உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாக்காளர்கள் நீக்கம்

 வாக்காளர்கள் நீக்கம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில், 3,003 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நெல்லிக்குப்பம் நகராட்சியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணராஜன் கூறியதாவது: நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 38, 003 வாக்காளர்கள் உள்ளனர். இந்த திருத்த பணியில் 705 இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு வைத்திருந்தவர்கள் 2298 பேர் என மொத்தமாக 3003 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரும் 11ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதனால், இதுவரை படிவங்களை திருப்பி தராதவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் ஆதாரத்துடன் கொடுத்தால் பட்டியலில் சேர்த்து கொள்ளபடுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ