உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஓட்டளிக்கும் முறை வாக்காளர்களுக்கு பயிற்சி

 ஓட்டளிக்கும் முறை வாக்காளர்களுக்கு பயிற்சி

புவனகிரி: கீரப்பாளையத்தில் புதிய வாக்காளர்கள் மின்னணு இயந்திரத்தில் ஓட்டளிக்கும் முறை குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு கீரப்பாளையம் ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ஓட்டளிக்கும் முறை குறித்து வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட குழுவினருடன், வருவாய்த்துறையினர் இணைந்து பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி