மழைக்கு சுவர் இடிந்து சேதம்
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று (அக்.,23) இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக பெண்ணாடம் அடுத்த கொத்தட்டையைச் சேர்ந்த மணி மனைவி மதி, 60. கூலித்தொழிலாளி. இவரது ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவர் திடீரென இன்று (அக்.,24) காலை 10:30 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மதி உயிர் தப்பினர். தகவலறிந்த வருவாய்த்துறை, பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.