தண்ணீர் பந்தல் திறப்பு
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் கச்சேரி ரோட்டில் ஒன்றியம், நகர தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கி திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், நகர செயலாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தனர். இதில் பொது மக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர், நுங்கு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் பாலமணிகண்டன், கல்யாணசுந்தரம், ராஜேந்திரன், செந்தில், மணிமாறன், சுப்பிரமணியன், அருண், தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.