நீர்தேக்கத் தொட்டி, ரேஷன்கடை திறப்பு
கடலுார்: கடலுார் ஈச்சங்காடு பகுதியில், மாவட்ட கவுன்சிலர் நிதியில் கட்டப்பட்ட ரேஷன்கடை, மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சிவக்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.14லட்சம் மதிப்பில் ரேஷன்கடை கட்டடமும், ரூ.15.60லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் புதிதாக கட்டப்பட்டு நேற்று திறப்புவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ம.க., மாவட்டசெயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மயிலம் தொகுதி சிவக்குமார் எம்.எல்.ஏ., சிறப்புவிருந்தினராக பங்கேற்று, ரேஷன் கடை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். திருவந்திபுரம், ஈச்சங்காடு, காரைக்காடு பகுதிகளில் நெல்களம், கருமகாரிய கொட்டகை, சிறுபாலம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். முன்னாள் ஊராட்சிதலைவர் செந்தாமரைக்கண்ணன், நிர்வாகிகள் தர்மலிங்கம், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் ரமேஷ், விஜயவர்மன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.