உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தர்பூசணி விற்பனை ஜோர்

தர்பூசணி விற்பனை ஜோர்

விருத்தாசலம்; விருத்தாசலம் பகுதிகளில் தர்பூசணி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.விருத்தாசலத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். வெயில் காலங்களில் பொதுமக்கள், உடல் சூட்டை தணிக்கும் நுங்கு, இளநீர், வெள்ளரி உள்ளிட்டவைகளை தேடி அலைந்து வாங்குவதால், அதன் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தர்பூசணி விற்பனை சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தர்பூசணி குறைந்தபட்சமாக 10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை