உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிகளை திருமணம் செய்த வெவ்வேறு வழக்கில் 2 பேருக்கு வலை

சிறுமிகளை திருமணம் செய்த வெவ்வேறு வழக்கில் 2 பேருக்கு வலை

விருத்தாசலம், : சிறுமிகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்கள் மீது போக்சோசட்டத்தில்வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை, கம்மாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த காந்தி மகன் அருண்குமார், 22;என்பவர் ஓராண்டாக காதலித்து, கடந்தாண்டு நவம்பர் 17ம் தேதி அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு, தனியாக வசித்துள்ளார். அதில், 3 மாத கர்ப்பமான சிறுமி, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது விபரம் தெரிய வந்தது.

மேலும் ஒரு சம்பவம்

விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயதுபிளஸ் 2 முடித்த மாணவியை, தொட்டிக்குப்பம் ராமதாஸ் மகன் ஜீவா, 27;என்பவர் காதலித்து,கடந்தாண்டு ஆகஸ்டு 6ம் தேதி திருமணம் செய்துள்ளார். தற்போது 5 மாத கர்ப்பமான சிறுமி, சிகிச்சை பெற்ற போது, விபரம் தெரிய வந்தது. இது குறித்து விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பாரதி புகார்களின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில்வழக்குப் பதிந்து, அருண்குமார், ஜீவா ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ