மேலும் செய்திகள்
சூலக்கல் தேர்த்திருவிழா வரும் 12ம் தேதி துவக்கம்
07-May-2025
புதுச்சத்திரம்: ரெட்டியார்பேட்டை கேசவ பெருமாள் கோவிலில், வரும் 12ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.புதுச்சத்திரம் அடுத்த ரெட்டியார்பேட்டை கேசவ பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் கடந்த 8ம் தேதி லஷ்மி ஹோமம், திருமஞ்சனம், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடந்தது.இன்று (10ம் தேதி) மாலை 6:00 மணிக்கு லட்சுமி நரசிம்மர் அவதாரத்தில் சுவாமி வீதி உலா, 11ம் தேதி மாலை 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. வரும் 12ம் தேதி மாலை 3:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7.00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 13ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி வீதியுலா நடக்கிறது.
07-May-2025