திருமண சீர்வரிசையாக ரூ.25,000 சக்ராலயா மோட்டார்சில் தள்ளுபடி
கடலுார், விழுப்புரம், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் கடலுார் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. தொழிலபதிபர் ராதாகிருஷ்ணன் உருவாக்கிய ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிறுவனம் அவரது மகன் துரைராஜ், இவரது மனைவி கோமதி துரைராஜ் உழைப்பால் ஆலமராக உயர்ந்து பல்வேறு நிறுவனங்களாக உருவெடுத்துள்ளது. கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் டாடா மோட்டார்சின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக சக்ராலயா மோட்டார்ஸ் உள்ளது. இந்நிறுவனம், கார்களை வாடிக்கையாளர்களுக்கு துரிதமாக விற்பனை செய்வதில் முதன்மையாக உள்ளது. புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் அதிநவீன தொழிநுட்ப சர்வீஸ் சென்டர் மூலம் டாடா வாகனங்களுக்கு உரிய சர்வீஸ் மையங்களை அமைத்து கார் விற்பனையில் முதன்மை பெற்று வருகிறது. சக்ராலயா மோட்டார்சில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது. இதுகுறித்து சக்ராலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் துரைராஜ் கூறுகையில், 'சக்ராலயா மோட்டார்சில் டாடா கார்கள் வாங்கும் திருமண ஜோடிகளுக்கு மணப்பெண் சீர்வரிசையாக ரூ.25,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள், போலீசார், வங்கி ஊழியர்கள், விவசாயிகளுக்கு ரூ.30,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இச்சலுகை வரும் 30ம் தேதி வரை மட்டுமே என்றார்.