உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலத்திட்ட உதவி: அ.தி.மு.க., வழங்கல்

நலத்திட்ட உதவி: அ.தி.மு.க., வழங்கல்

பண்ருட்டி: பண்ருட்டி நகர அ.தி.மு.க., சார்பில் பக்ரீத் பண்டிகையொட்டி ஏழை, எளிய இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சம்பத், 200 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி, புத்தாடைகள் வழங்கினார். விழாவில், நகர அவைத் தலைவர் ராஜதுரை, ஜெ., பேரவை நகர செயலாளர் செல்வம், நகர இணை செயலாளர் சத்யா கலைமணி, துணை செயலாளர்கள் உமாமகேஸ்வரி ஸ்ரீதர், ரகு, மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசன், சர்முனிச அலாவுதீன், நகர எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாலு, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ரவிச்சந்திரன், நகர இளைஞரணி செயலாளர் கருணாமூர்த்தி, நகர பாசறை செயலாளர் குமார், நகர தகவல் தொழில்நுட்ப செயலாளர் பரந்தாமன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி