பூதங்குடியில் நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ.,வழங்கல்
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் காத்திருப்போர் கூடம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட காத்திருப்போர் கூடத்தை திறந்து வைத்து, துாய்மை பணியாளர்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கருப்பன், பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், ஜெயசீலன், முத்து, மாநில ஜெ.. பேரவை துணை செயலாளர் அருளழகன், மாவட்ட துணை செயலாளர் அரங்கப்பன், ரமேஷ், பூபாலன், தட்சிணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.