உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலவாழ்வு விழிப்புணர்வு முகாம்

நலவாழ்வு விழிப்புணர்வு முகாம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு விழிப்புணர்வு முகாம் நடந்தது ஏ.எம்.எம்.,அறக்கட்டளை, அரசு பெரியார் கலைக் கல்லுாரியின் சமூகப்பணி துறை மற்றும் என்.எம்.சி.டி. தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. டாக்டர் உமர் மல்லையா முகாமை துவக்கி வைத்து பேசினார். உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். துரித உணவுகளையோ, சுகாதாரம் இல்லாத கடைகளிலோ சாப்பிட கூடாது. சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவும், ஆரோக்கியமாக இருக்கவும் உடல் பயிற்சி அவசியம் செய்ய வேண்டும் என பேசினார். கல்லுாரி பேராசிரியர் விக்னேஷ், துப்புரவு ஆய்வாளர் கேசவன், செந்தில் செழியன், செந்தில்குமார், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை