உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயணிகள் நிழற்குடை கழிவறை திறப்பது எப்போது?

பயணிகள் நிழற்குடை கழிவறை திறப்பது எப்போது?

நெல்லிக்குப்பம் : கழிவறையுடன் கூடிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் சிரமத்தை தவிர்க்கவும் வகையில், பயணிகள் நிழற்குடையுடன் கழிவறையையும் சேர்த்து கட்ட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கடலூர் மடப் பட்டு சாலை விரிவாக்கத்தின் போது வெள்ள கேட் , மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி உட்பட பல இடங்களில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக தண்ணீர் வசதியுடன் இரண்டு கழிவறைகளை கட்டினர். இவ்வாறு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை ஒரு இடத்தில் கூட பயன்பாட்டுக்காக திறக்கபடாததால் பாழாகி வருகிறது. விரைவில் திறப்பு விழா நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ