உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடியை கண்டித்த மனைவி; துாக்கிட்டு கணவர் தற்கொலை

குடியை கண்டித்த மனைவி; துாக்கிட்டு கணவர் தற்கொலை

சிதம்பரம்; குடும்ப தகராறில் வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காட்டுமன்னார்கோவில் அடுத்த ராதாநல்லுார், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நல்லசாமி மகன் வேல்முருகன், 35; இவரது மனைவி உமாதேவி. 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் வேல்முருகன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை உமாதேவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த நல்லசாமி, குடி போதையில், போர்வையால், வீட்டின் விட்டத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ