மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
29-Apr-2025
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் திடீர்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்,34;இவரது மனைவி செல்வி,31; செல்வி கடந்த 18 ம் தேதி தமது வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள தமது தாய் வீட்டில் உள்ள தன்னுடைய பிள்ளைக்கு முடி வெட்ட செல்கிறேன் என்று கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.செல்வியை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து செல்வியை தேடி வருகின்றனர்.
29-Apr-2025