உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாழை நிலத்தை சேதப்படுத்திய காட்டுபன்றிகள்

 வாழை நிலத்தை சேதப்படுத்திய காட்டுபன்றிகள்

கடலுார்: வாழைக்கன்றுகளை காட்டுபன்றிகள் கடித்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கடலுார் அருகே உள்ள மலைக்கிராமங்களில் ஒன்று புலியூர் காட்டுசாகை. இக்கிராமத்தில் வாழை, கரும்பு, காய்கறி பயிர்கள் பயிர் செய்வது வழக்கம். தற்போது வாழைக்கன்று நடவு செய்து 2 மாதங்கள் ஆகிறது. வாழை துளிர்விட்டு புதியதாக 2 இலைகள் வந்துள்ளன. இந்நிலை யில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அருகில் உள்ள காடுகளில் இருந்து காட்டு பன்றிகள் நிலத்தில் நடவு செய்யப்பட்ட வாழைக் கன்றுகளை கடித்து குதறியதோடு, வாழைக்கன்றுகளை பிடிங்கி போட்டும் நாசம் செய்துள்ளன. நேற்று காலை வழக் கம்போல் நிலத்திற்கு வந்த விவசாயிகள் வா ழைக்கன்றுகளை பிடுங்கி கடித்து போட்டுக்கிடப்பதை பார்த்து வேதனை யடைந்தனர். இது குறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி