சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
புதுச்சத்திரம்: அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில், 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியைச் சுற்றி, முழுவதுமாக சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பள்ளி நாட்களில் பள்ளி வளாகத்திலேயே ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உலா வருகின்றன. பள்ளி வளாகத்தில் கால்நடைகள் அசுத்தம் செய்வதால், துர்நாற்றம் வீசுகிறது. இந்த பள்ளியில், சுற்றுச்சுவர் அமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.