உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வில்லியநல்லூர், புதுச்சத்திரம், மணிக்கொல்லை, அத்தியாநல்லூர் பகுதி சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பகுதியில் இருந்த சுற்றுச்சுவர், விழுப்புரம் -- நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இப்பகுதியில் மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலைகள், கழிவுநீர் கால்வாய் அமைத்தும், இதுவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன் பகுதியில், சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. இதனால் நாய், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சுகாதார நிலையத்தில் உள்ளே சென்று அசுத்தம் செய்கின்றன.எனவே புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி