உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

புதுச்சத்திரம்: சிறுபாலையூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டுமென, இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூரில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. இதனால் விளையாட்டு போட்டியில் ஆர்வம் இருந்தும், விளையாடுவதற்கு இடம் இல்லாமல், இளைஞர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சிறுபாலையூரில் விளையாட்டு மைதானம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ