விளையாட்டு பூங்கா அமைக்கப்படுமா
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கெங்கைகொண்டான் பேரூராட்சி, பழையநெய்வேலி, பெரியாக்குறிச்சி, மேல்பாதி, கீழ்பாதி, வடக்குவெள்ளுர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமனோர் வசித்து வருகின்றனர். இங்கு என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம், இரண்டாம் சுரங்க நிர்வாக அலுவலகம், பள்ளிகள், மார்க்கெட், வங்கிகள் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் நவீன வசதிகளுடன் விளையாட்டு பூங்கா இல்லாததால் ஒய்வு பெற்ற தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், சிறுவர்களுக்கு பொழுது போக்கு இடம் இல்லாததால் கடும் சிரமம் அடைகின்றனர். என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே என்.எல்.சி. பகுதியில் காலியாக உள்ள பகுதிகளில் என்.எல்.சி., சி.எஸ்.ஆர்., நிதியில் நவீன விளையாட்டு பூங்கா அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடை பாதை வசதிகளுடன் நவீன விளையாட்டு பூங்கா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.