உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சட்டசபை தேர்தல் வாக்குறுதி வரும் தேர்தலுக்குள் நிறைவேறுமா? விருத்தாசலம் மக்கள் எதிர்பார்ப்பு!

 சட்டசபை தேர்தல் வாக்குறுதி வரும் தேர்தலுக்குள் நிறைவேறுமா? விருத்தாசலம் மக்கள் எதிர்பார்ப்பு!

க டலுார் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட சட்டசபை தொகுதி விருத்தாசலம். இந்த தொகுதியில் வெற்றி பெற்ற (1996 - 2001) தி.மு.க., குழந்தை தமிழரசன் துவங்கி, பா.ம.க., கோவிந்தசாமி, தே.மு.தி.க., விஜயகாந்த், தே.மு.தி.க., முத்துக்குமார், அ.தி.மு.க., கலைச்செல்வன் மற்றும் சிட்டிங் காங்., ராதாகிருஷ்ணன் வரை தனி மாவட்ட கோரிக்கையை சட்டசபையில் வலியுறுத்தி வருகின்றனர். அதில், அப்போதைய கலைச்செல்வன் எம்.எல்.ஏ., சட்டசபையில் தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி பேசியபோது, தனி மாவட்டத்திற்கு வருவாய் வட்டங்கள் குறைவாக இருப்பதால், சாத்தியம் இல்லை என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தடாலடியாக தெரிவித்தார். இது தொகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. விருத்தாசலத்தை விட மிகக்குறைந்த வட்டங்களை கொண்ட அரியலுார் மாவட்டத்தை பெரம்பலுாரில் இருந்து பிரித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால், வருவாய் வட்டங்கள், மக்கள் தொகை என எந்த அளவிலும் குறைவில்லாத விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., சுணக்கம் காட்டுவது, தொகுதி மக்களிடம் விரக்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக விருத்தாசலத்தில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தற்போதைய முதல்வர் ஸ்டாலின், விருத்தாசலம் தனி மாவட்டம் அறிவிக்கப்படும் என உறுதியளித்து சென்றார். ஆனால், ஆட்சி முடியும் தருவாயிலும் இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை. இருப்பினும் தேர்தல் நெருங்குவதால், ஓட்டுக்களை பெறுவதிற்காவது தனி மாவட்டமாக அறிவிப்பார்கள் என்ற நப்பாசையில் தொகுதி மக்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை