சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
கடலூர்: கடலூர் அடுத்த அன்னப்பன்பேட்டையில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி சிறுவர், சிறுமியர் விளையாடுவதற்காக, சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த சிறுவர் பூங்காவில் உள்ள சீசா, சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் சிறுவர்கள் விடுமுறை நாட்களில் பூங்காவில் விளையாட முடியாத நிலை உள்ளது. மேலும் பூங்காவில் செடி, கொடிகள் முளைத்து புதராக மாறியுள்ளது. எனவே, சிறுவர், சிறுமியர் பயனடையும் வகையில் சிறுவர் பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.