உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் நகரில் பெருகி வரும் வாகன போக்குவரத்து சீரமைக்கப்படுமா? 3 இடங்களில் டிராபிக் ஜாமை தவிர்க்க நடவடிக்கை தேவை

கடலுார் நகரில் பெருகி வரும் வாகன போக்குவரத்து சீரமைக்கப்படுமா? 3 இடங்களில் டிராபிக் ஜாமை தவிர்க்க நடவடிக்கை தேவை

கடலுார்; கடலுார் மாநகரில் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோடு, திருப்பதிரிப்புலியூர் ஜவான்ஸ் பவன்ரோடு, தேரடித்தெரு ஆகிய ஜங்ஷன்களில் தினம் வாகன நெரிசல்களால் பொதுமக்கள் அவதிப்பட் டு வருகின்றனர். கடலுார் மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாததாகிறது. புதுச்சேரி, கடலுாரில் இருந்து ஏராளமான வாகனங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் கடலுார் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் ஏராளமான வாகனங்கள் நகருக்குள் வலம் வருகின்றன. அதானல் பகல்முழுவதும் போக்குவரத்து நெரில் ஏற்படுகின்றது. பொது மக்கள் ஜவுளி, காலணி, மளிகை, இனிப்பு போன்ற பொருட்களை வாங்க அங்குமிங்கும் செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. கடலுார் நேதாஜி சாலை மிகவும் குறுகலானது. அதனால் வாகனங்கள் எதிரெதிராக செல்ல முடியாது என்பதால் போலீசார் ஒரு வழிப்பாதையாக மாற்றினர். கனரக வாகனங்கள் செம்மண்டலம் வழியாக சுற்றிக்கொண்டு செல்கின்றன. ஆனால் கார், ேஷர் ஆட்டோக்கள் பழைய கலெக்டர் அலுவலகத்தை சுற்றிக்கொண்டு வந்து 50 மீட்டர் துாரத்தில் நேதாஜி சாலையில் மீண்டும் இணைகின்றன. அவ்வாறு இணையும் இடத்தில்தான் தினம் தினம் பிரச்னை நடக்கிறது. போலீசார் எப்போதாவது வந்து வழக்குப்பதிவு செய்தாலும் அதை ஆட்டோ டிரைவர்கள் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. அதேப்போல பண்ருட்டி, நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கடலுார் முதுநகருக்கு செல்ல, ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை வழியாக வருகின்றன. இந்த வாகனங்கள் லாரன்ஸ் ரோடுக்கு செல்லும் வாகனங்களை குறுக்காக கடந்து செல்ல வேண்டும். அப்போது சரியான வழி காட்டுதல் இல்லாமல் இப்பகுதியில் 'டிராஃபிக் ஜாம்' ஏற்படுகிறது. அதேப்போல லாரன்ஸ்ரோடு சுரங்கப்பாலத்தில் செல்லும் வாகனங்கள் தேரடித்தெரு, சங்கரநாயுடு தெரு ஆகிய தெருக்களின் ஜங்ஷனாக உள்ளது. இப்பகுதியில் தினம் தினம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று விடுகின்றன. இங்கு போலீசார் பணியில் இருந்தால்தான் ஓரளவு வாகனங்கள் சீராக செல்ல முடியும். இல்லையென்றால் தாருமாறாக செல்லும் வாகனங்கள் முட்டிக்கொண்டு ஸ்தம்பிக்க செய்கின்றன. இவ்வாறு போக்குவரத்து பிரச்னை ஏற்படும் இடங்களில் சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை