மேலும் செய்திகள்
சிமெண்ட் காரை பெயர்ந்து புதிய நாடக மேடை சேதம்
21-Jun-2025
நடுவீரப்பட்டு: குமளங்குளத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் இல்லாததால் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர். கடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி குமளங்குளம். இந்த ஊராட்சியில் குமளங்குளம், வன்னியர்புரம், வாண்டராசன்குப்பம், நரியங்குப்பம், சஞ்சீவிராயன்குப்பம், நடுவீரப்பட்டு காலனி ஆகிய கிராமங்கள் உள்ளது.குமளங்குளம் ஊராட்சிக்கு குமளங்குளம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால், இந்த கட்டடம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. இதனை சீரமைக்காததால் கட்டடம் பயன்படுத்த நிலையில் உள்ளது. ஊராட்சியில், தொடர்ந்து குமளங்குளம் கிராமத்தை சேராதவர்களே தலைவர்களாக பதவி வகித்தனர். இதன் காரணமாக தலைவர்களாக பதவி வகித்தவர்கள் குமளங்குளத்தில் உள்ள கட்டடத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால் பழுதடைந்து காணப்படுகிறது. குமளங்குளம் ஊராட்சியில் தான் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட வேண்டும். ஆனால், ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் அவரவர் வசதிக்கேற்ப தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகள், கிராம சேவை மையக் கட்டடத்தையே ஊராட்சி அலுவலகமாக பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் குமளங்குளம் கிராம மக்கள், குறிப்பிட்ட நேரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறவும், வரி செலுத்தவும் முடியாமல் தவிக்கின்றனர். எனவே, குமளங்குளம் ஊராட்சிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21-Jun-2025