உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

நடுவீரப்பட்டு : மேல்பட்டாம்பாக்கம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.நெல்லிக்குப்பம் மதுவிலக்கு போலீசார் மேல்பட்டாம்பாக்கம் மதுவிலக்கு சோதனை சாவடி அருகே கஸ்டம்ஸ் சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த பைக்கை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில், 48 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில், பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு பத்மநாபன்,46; என்பதும், மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை