உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாய மோட்டாரில் ஒயர் திருட்டு; நெல்லிக்குப்பம் விவசாயிகள் அச்சம்

விவசாய மோட்டாரில் ஒயர் திருட்டு; நெல்லிக்குப்பம் விவசாயிகள் அச்சம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் பகுதியில் விவசாய மோட்டார் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் நன்றாக உள்ளது.இதனால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர். நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கபடுகிறது. மேலும் மின்சாரம் தடைப்பட்டு வந்தால் தானாகவே மோட்டார் இயங்கும்படி ஆட்டோமேடிக் பொருத்தியுள்ளனர். இதனால் இரவு நேரங்களில் தண்ணீர் பாய்ச்ச நிலத்துக்கு போக வேண்டிய அவசியமில்லாமல் உள்ளனர். இதை பயன்படுத்தி கொண்டு மர்ம நபர்கள் சோழவல்லி, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் போன்ற பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் கொட்டகையில் இருந்து மோட்டாருக்கு செல்லும் மின்சார ஒயர்களை திருடிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான 3 மோட்டார்களிலும் கேபிள்களை திருடி சென்றனர். கேபிள் புதியதாக போடுவதோடு மோட்டார் பயன்பாடு என, 5 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது. இரவில் நிலத்துக்கு சென்று கண்காணிக்கலாம் என்றால் காட்டு பன்றிகள் தொல்லையால் பயந்து கொண்டு போவதில்லை. போலீசார் கேபிள் திருட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை