உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாராயம் விற்ற பெண் கைது

சாராயம் விற்ற பெண் கைது

நெல்லிக்குப்பம்: சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த பெத்தாங்குப்பத்தில் சாராயம் விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பண்ருட்டி கலால் சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். இதில், செல்வம் மனைவி செல்வராணி,54; என்பவர் தனது கோழி கொட்டகையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில் கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து செல்வராணியை கைது செய்து, 54 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை