உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் பதுக்கிய பெண் கைது

மதுபாட்டில் பதுக்கிய பெண் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு பகுதியில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒதியடிக்குப்பம் சந்திரசேகர் மனைவி மாணிக்கவல்லி,51; என்பவர் வீட்டின் பின்பகுதியில் 90 மி.லி., அளவுள்ள 65 புதுச்சேரி மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார், மாணிக்கவல்லியை பிடித்து நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்து புகார் செய்தனர். சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு வழக்குப் பதிந்து மாணிக்கவல்லியை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி