உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் போலி நகை அடகு வைக்க முயன்ற பெண் கைது

விருத்தாசலத்தில் போலி நகை அடகு வைக்க முயன்ற பெண் கைது

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் உள்ள நகை அடகு கடையில், போலி நகையை அடகு வைக்க முயன்ற பெண்ணை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி கிராத்தை சேர்ந்தவர் மணிவாசகம், 43. இவர் அதேபகுதியில், நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மோதிரம் அடகு வைக்க வந்தார். அப்போது, அந்த மோதிரத்தை மணிவாசகம் சோதனை செய்து பார்த்துள்ளார். அதில், அந்த மோதிரம் தங்கமுலாம் பூசப்பட்ட போலி மோதிரம் என்பது தெரிய வந்தது. உடன், சந்தேகமடைந்த அவர் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் சேலம் மாவட்டம், பி.நாட்டார்மங்கலத்தை சேர்ந்த சதாசிவம் மனைவி புவனேஸ்வரி என்பதும், போலி நகையை அடகு வைக்க முயன்றதும் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, புவனேஸ்வரியை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரிடம் இருந்த 4 கிராம் போலி மோதிரம் மற்றும் ஒரு மூக்குத்தியை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை