மேலும் செய்திகள்
'யு டியூப்' பார்த்து செயின் பறித்த இருவர் கைது
17-Apr-2025
கடலுார: கடலுார் அருகே கூழ் விற்கும் மூதாட்டியிடம் செயினை பறித்த வழக்கில் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த புதுக்கடை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அஞ்சலாட்சி,53; இவர் கடந்த 4ம் தேதி விழுப்புரம்-நாகப்பட்டிணம் நெடுஞ்சாலையில் புதுக்கடையில் கூழ் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் மூதாட்டியின் கழுத்திலிருந்த 3 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் செயின் பறிப்பில் தொடர்புடைய வேலுார் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த பேபி,27, என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பேபி, பல்வேறு பகுதிகளில் நோட்டமிட்டது தெரிந்தது. இவர் அளித்த தகவலின் பேரில், செயின்பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17-Apr-2025