மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது
16-Aug-2025
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அருகே கள்ளச்சந்தையில் மதுவிற்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, கோ.பவழங்குடி அடுத்த சந்தானகுப்பத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பெண் தப்பியோடினார். அங்கு சென்று பார்த்தபோது, 40 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், அவர், கன்னியங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்பாவு மனைவி சாவித்ரி, 40; என்பதும், அவரது தாய் வீட்டிற்கு அருகே கள்ளச்சந்தையில் மதுவிற்றதும் தெரிந்தது. மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய சாவித்ரியை தேடி வருகின்றனர்.
16-Aug-2025