உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாரி மோதி பெண் பலி

லாரி மோதி பெண் பலி

சேத்தியாத்தோப்பு: மொபட்டில் சென்ற பெண், லாரி மோதி இறந்தார். விருத்தாசலம் அடுத்த கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மனைவி தேன்மொழி,35; பூ வியாபாரி. நேற்று வழக்கம் போல் பூ வியாபாரத்திற்கு வீட்டிலிருந்து மொபட்டில் சென்று கொண்டிருந்தார். சேத்தியாத்தோப்பு, ெரியகுப்பம் வெள்ளாறு பாலம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தலேயே இறந்தார். புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ