மேலும் செய்திகள்
காவலர் தினம்
24-Oct-2024
பெண்ணாடம்: பெண்ணாடம் லயன்ஸ் கிளப் மற்றும் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் கவியரங்கம் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட மகளிரணி தலைவர் பாவலர் மணி நிறைமதி நீலமேகம் தலைமை தாங்கினார். திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி, மகளிரணி உறுப்பினர்கள் ரேவதி, பிரியா, வசந்தா முன்னிலை வகித்தனர். லயன்ஸ் கிளப் தலைவர் சக்திவேல் வரவேற்றார்.நிகழ்ச்சியில், புதுக்கவிதை, நாவல், புதினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மகளிர் இளம் கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
24-Oct-2024