மக்களுக்காக பணியாற்றுங்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் அட்வைஸ்
சிதம்பரம் : மக்களுக்காக பணியாற்றுங்கள் என உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கி பேசினார்.சிதம்பரம், அண்ணாமலை நகர் பேரூராட்சிஅலுவலக புதிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி உதவி இயக்குனர் வெங்கடேசன் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் சரண்யா முன்னிலை வகித்தார். அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி வாழ்த்துரை வழங்கினார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.அப்போது அமைச்சர் பேசியதாவது:அண்ணாமலை பேரூராட்சியில், பல ஆண்டுகளுக்கு பின் நகர செயலாளராக பழனி பொறுப்பேற்று, பேரூராட்சி தலைவராக வந்துள்ளார்.பொறுப்பை உணர்ந்து, மக்கள் பணியாற்ற வேண்டும். மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்க பணியாற்ற வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வழங்கியுள்ள திட்டங்களை, மக்களுக்கு கொண்டு சேர்த்தாலே மக்கள் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். மகளிர் உரிமை திட்டம், இலவச மகளிர் பஸ் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம், இதுவரை தமிழகத்தில், தனிநபர் ்பலன் பெற்றது, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தான் தொடங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அப்பாற்பட்ட தனி நபர்கள் பயன்பெற்று வருகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் பெண்கள் ஆதரவு எழுச்சியும் பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு பணம் பெறக்கூடிய சூழ்நிலை இந்தியாவில் எங்கும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் தாசில்தார் ஹேமா ஆனந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர்கள் தேவிகா, சந்திரா,விஜயா, லட்சுமி, வேலு, அன்பரசு உட்பட வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.