உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விநாயகர் சிலை தயாரிக்கும் பணி புவனகிரியில் தீவிரம்

விநாயகர் சிலை தயாரிக்கும் பணி புவனகிரியில் தீவிரம்

புவனகிரி : விநாயகர் சதுர்த்தியையொட்டி, புவனகிரியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி, கீழ் புவனகிரியில் விநாயகர் சிலை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில், மரவள்ளி கிழங்கு மாவு, பேப்பர் கூழ், ரசாயனமில்லாத கல் மாவு உள்ளிட்டவைகளின் கலவையைக் கொண்டு ஒரு அடி உயரத்தில் இருந்து அதிகபட்மாக 10 அடி உயரம் வரை விநாயகர் சிலை வடிவமைக்கின்றனர்.தொடர்ந்து, 3 தினங்களில் அச்சில் இருந்து அகற்றி சிலை நன்கு காய்ந்த பின் வர்ணம் பூசி விற்பனைக்கு அனுப்புகின்றனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிலைகளுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மிகுந்த வரவேற்பு உள்ளதால் இந்த ஆண்டு சிலைகள் அதிகவில் தயார் செய்து வருகின்றனர். இது குறித்து சிலை வடிவமைப்பாளர் சிட்டிபாபு கூறுகையில். 'அரசு உத்தரவிற்கு உட்பட்டு எளிதில் கரையும் தன்மை கொண்ட ரசாயனம் அல்லாத பொ ருட்களில் சிலை வடிவமைக்கின்றோம். சிலைகளின் அளவிற்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்கின்றோம். பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தமாகவும், கொள்முதல் செய்கின்றனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை