மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
வடலுார்: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார். கர்நாடக மாநிலம், பெங்களூரூ, ஜே.பி நகரை சேர்ந்தவர் நாராயணப்பா மகன் சங்கித்குமார், 29; தனியார் இன்டர்நெட் கேபிள் பதிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த, 24ம் தேதி வடலுார், கண்ணுதோப்பு பாலம் அருகே கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பி மீது உராய்வு ஏற்பட்டது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். இதையடுத்து புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சங்கித்குமார், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.