உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி சாவு; போலீசார் விசாரணை

தொழிலாளி சாவு; போலீசார் விசாரணை

புதுச்சத்திரம்; கூலித்தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். புதுச்சத்திரம் அடுத்த ஆயித்துறையை சேர்ந்தவர் முத்துராமன், 58; மீன்பிடி தொழிலாளி. கடந்த 5ம் தேதி, அதே பகுதியில் உள்ள பெருமாள் ஏரியில் மீன் பிடிக்க சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில், முத்துராமனின் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டனர். முத்துராமன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி வாணி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை