கடலுாரில் தொழிலாளி கொலை
கடலுார்:பைக் நிறுத்திய தகராறில், தொழிலாளியை அடித்து கொன்ற மூவரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் மனோகர், 54. இவர், வண்டிப்பாளையம், பாலன் என்பவருக்கு சொந்தமான கைத்தறி கூடத்தில், மூன்று ஆண்டுகளாக நெசவு தொழிலாளியாக பணிபுரிந்தார். மனோகர் வேலைக்கு வந்தால், கைத்தறி கூடம் எதிரில் பைக்கை நிறுத்தி செல்வது வழக்கம். இது தொடர்பாக, எதிர் வீட்டில் வசிக்கும் கார்த்தி கேயனுக்கும் மனோகருக்கும் பிரச்னை இருந்தது. நேற்று மாலை, ஏற்பட்ட வாக்குவாதத்தால் கார்த்திகேயன், அவரது தரப்பினர், மனோகரை சரமாரியாக அடித்துக் கொன்றனர். கார்த்திகேயன் உள்ளிட்ட 3 பேரை முதுநகர் போலீசார் கைது செய்தனர்.