உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். காட்டுமன்னார்கோவில் அடுத்த குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ்,23; விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ