தொழிலாளி தற்கொலை
பரங்கிப்பேட்டை: வெள்ளக்கரை அரசடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், 42; கட்டட தொழிலாளி. இவரது, மனைவி ராஜேஸ்வரி. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால், இருவரும் 3 மாதங்களுக்கு முன் பரங்கிப்பேட்டை அடுத்த மணல்மேடு கிராமத்தில் உள்ள ராஜேஸ்வரியின் தாய் வீட்டில் தங்கியிருந் தனர். கடந்த மாதம் 22ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. விரக்தியடைந்த செல்வகுமார், பூச்சி மருந்து குடித்தார். உடன், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். பரங்கிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.