மேலும் செய்திகள்
துாய்மை தொழிலாளர்களின் 8 நாள் போராட்டம் முடிவு
13-Mar-2026
பரங்கிப்பேட்டை: தனியார் அனல் மின் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில், தனியார் அனல் மின் நிறுவனம் உள்ளது. இங்கு, ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு மற்றும் அடிப்படை வசதி செய்துத்தரக்கோரி நுழைவு வாயில் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த, பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா, சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களிடம், அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னைக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததால், தொழிலாளர்கள் கலைந்துச் சென்றனர்.
13-Mar-2026