மேலும் செய்திகள்
திருவள்ளூரில் இரண்டு நாள் ஆட்சிமொழி பயிலரங்கம்
14-Aug-2025
நெய்வேலி: நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லுாரி மற்றும் என்.ஐ.பி.எம். அமைப்பு ஆகியன சார்பில் 'கல்விக்கு அப்பால் வளர்தல்' பயிலரங்கம் நடந்தது. கல்லுாரி வளாகத்தில் நடந்த பயிலரங்கை என்.எல்.சி., மனிதவளத்துறை பொது மேலாளர் ஓ.எஸ்.அறிவு துவக்கி வைத்து பேசினார். என்.எல்.சி., மனித வளத்துறை அதிகாரிகள் ஆனந்த சிவகுமார், அப்துல் கலாம் ஆசாத் முன்னிலை வகித்தனர். என்.ஐ.பி.எம்., நெய்வேலி கிளை கூடுதல் செயலர் டாக்டர் முருகேஸ்வரி வரவேற்றார். முதன்மை விருந்தினர் ஜவகர் அறிவியல் கல்லுாரி செயலர் பங்கஜ் குமார், 'சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான உத்திகள், இன்றைய போட்டி நிறைந்த உலகில் பணியிடத் தேவைகள், தொழில் முறைகள், நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் குறித்து விளக்கி பேசினார். கல்லுாரி முதல்வர் தேவி நன்றி கூறினார்.
14-Aug-2025