உலக மண் தின கட்டுரை போட்டி
கடலுார்; கடலுார் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில், உலக மண் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவியர்களுக்கு மண்வளம் குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடந்தது.கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் செந்தாமரைச்செல்வி தலைமை தாங்கினார், உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயச்சந்திரன், பாலமுருகன் முன்னிலை வகித்தனர், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட இளைஞர் நீதிக் குழுமம் உறுப்பினர் துர்கா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினர். இதில், மண் வளத்தை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி பருவத்தில் தீயவர்கள் நட்பால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, வேளாண் ஆசிரியர் அன்பழகன், உடற்கல்வி ஆசிரியர் அருள்செல்வம் உட்பட கலந்து கொண்டனர்.