உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் சுவாமி கோவிலில் 354ம் ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை பஞ்சாமிர்த அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை ராஜீவி கணேஷ் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலச்சந்தர், பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இசை, வித்யா கல்யாணராமனின் வாய்ப்பாட்டு நடந்தது. ராகவேந்திரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் . இன்று (12ம் தேதி) காலை பஞ்சாமிர்த அபிேஷகம் நடக்கிறது. மாலை ஸ்ருதி பட் வாய்ப்பாட்டு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !