உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா துவக்கம்

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா துவக்கம்

புவனகிரி : புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் ஆராதனை விழா துவங்கியது. புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் ஆண்டுதோறும் ஆராதனை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ஆராதனை விழா நேற்று காலை சுப்ரபாதம், வேத பாராயணம், சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருவாரூர் ஆன்மீக ஆனந்தம் அமைப்பு தலைவர் கனகராஜ், தொழிலதிபர் சரவணன் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராகவேந்திரர் புனிதத் தொண்டு அறக்கட்டளை கவுரவத் தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல் செய்திருந்தனர். இன்று (11ம் தேதி) புண்ணிய ஆராதனையும், நாளை 12ம் தேதி உத்தர ஆராதனையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை