கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு
கடலுார் : கடலுாரில் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவி யாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க கூட்டு றவு சங்கங்களில் காலி யாக உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. தேர்வு எழுத 1,696 பேர் விண்ணப்பித்தனர். இதில், 1292 பேர் தேர்வு எழுதினர். 85 அறைகளில் 85 தேர்வறை கண்காணிப்பாளர் கள் மற்றும் 5 முதன்மை தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மை யத்தை கண்காணித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் இளஞ்செல்வி தேர்வை ஆய்வு செய்தார்.