துப்புரவு பணியாளரை தாக்கிய வாலிபர் கைது
கடலுார்: தகராறில் பெண் துப்புரவு பணியாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த மணக்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி சுசிலா, 45; பச்சையாங்குப்பம் துப்புரவு பணியாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் தினேஷ்மூர்த்தி, 26; என்பவருக்கும், முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு தினேஷ்மூர்த்தி, அப்பகுதியில் சென்றபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தினேஷ்மூர்த்தி, சுசிலாவை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார்.இது குறித்த புகாரின்பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து தினேஷ்மூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.