மேலும் செய்திகள்
அச்சுறுத்தும் காட்டுமாடுகள்; கொசுக்களால் தொற்று
19-Sep-2025
விருத்தாசலம்; பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடி பாலகிருஷ்ணன் மகன் ஆனந்தகுமார், 30; இவரது மனைவி ஸ்ரீசக்தி. இருவரும் உறவினரான விருத்தாசலம் மேட்டுத்தெரு சேகர் மனைவி தீபபிரியா, 37; வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 11ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற ஆனந்தகுமார் திரும்பி வரவில்லை. இது குறித்து நேற்று காலை தீபபிரியா கேட்டபோது, ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், கையில் வைத்திருந்த கொராடால், அவரது காதை திருகி, ஆபாசமாக திட்டியுள்ளார். காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தீபபிரியா புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்தகுமாரை கைது செய்தனர்.
19-Sep-2025