உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  முதியவர் தாக்கு: வாலிபர் கைது

 முதியவர் தாக்கு: வாலிபர் கைது

விருத்தாசலம்: முதியவரை தாக்கி, மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெண்ணாடம் அடுத்த பாசிகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், 67; மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி மாலை, இவரது பசு மாடு மேய்ச்சலுக்கு சென்று திரும்பியபோது அருகிலுள்ள விஜய் என்பவரது வீட்டு வாசலில் இருந்த தண்ணீர் குடத்தை கீழே தள்ளிச் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த விஜய், அவரது சகோதரர் முரளி இருவரும் கல்யாணசுந்தரத்தை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். அவரது புகாரின் பேரில், விஜய், முரளி மீது கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விஜயை, 34; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி